யானையை பார்த்ததும் காரை ரிவர்ஸில் இயக்கிய ஓட்டுநர்.. `அத யாரும் எதிர்பாக்கல' - அதிர்ச்சி வீடியோ
யானையை பார்த்ததும் காரை ரிவர்ஸில் இயக்கிய ஓட்டுநர்.. `அத யாரும் எதிர்பாக்கல' - அதிர்ச்சி வீடியோ
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மலக்கப்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் சோலையார் தோட்டபுரம் என்ற இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற காரை திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த காட்டு யானை ஓன்று வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர்கள் காரை பின்னோக்கி இயக்கியுள்ளனர். ஆனால் காரின் பின் சக்கரத்தில் பிளாஸ்டிக் கவர் சிக்கியதால் காரை இயக்க முடிய அப்போது காரை துரத்தி வந்த யானை காரின் முன்பகுதியை அடித்து உடைத்தது, இதில் காரில் இருந்தவர்கள் 4 பேரை எதுவும் செய்யாமல் யானை திரும்பி சென்றது. பின் வனத்துறையினர் வந்து காரை மீட்டனர்.
Next Story