"ராகுல் தொகுதியில் பலியான இளைஞர் குடும்பத்துக்கு நீங்க எப்படி நிதி தரலாம்?"

x

கர்நாடக காட்டு யானையால் கொல்லப்பட்ட கேரள இளைஞரின் குடும்பத்திற்கு, கர்நாடக அரசு நிவாரணம் வழங்குவதை கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த இளைஞர் அஜீஷ், காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணம், கர்நாடகாவில் கடந்த ஆண்டு பிடிக்கப்பட்ட மக்னா யானை, வயநாடு சென்றிருந்த நிலையில், இளைஞரை தாக்கி கொன்றுள்ளதால், நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை திருப்திப்படுத்த கர்நாடக அரசு அறிவித்துள்ளதாக, அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. கர்நாடக மக்கள் கடும் வறட்சியில் த‌த்தளித்து வரும் நிலையில், அவர்கள் கொடுக்கும் வரிப்பணத்தை, கேரளாவில் ராகுல் காந்தியின் தொகுதியில் இறந்தவரின் குடும்பத்திற்கு கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது, கர்நாடக மக்களுக்கு ஆளும் காங்கிரஸ் அரசு செய்யும் அநீதி என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்