மாநிலத்தையே உற்றுநோக்க வைத்த 16 வயது சிறுமியின் கர்ப்பம்.. மிக சிக்கலான வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

x

திருச்சூரை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்க ஆளாகி கர்ப்பமடைந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கருக்கலைப்புக்கு அனுமதிக்குமாறு சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஒரு நபர் பெஞ்ச், கருக்கலைப்புக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்து கருக்கலைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. கரு உருவாகி 26 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு அனுமதிக்கப்படுவதாகவும், சிறுமியின் மனநிலை குறித்த நிபுணர்களின் அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. சிறுமிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் பலாத்கார வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் கருவின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருவில் உள்ள குழந்தையை உயிருடன் வெளியே எடுக்க முடிந்தால், உயிரை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுமி அல்லது அவரது குடும்பத்தினர் பராமரிக்கத் தயாராக இல்லை என்றால், அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் இந்த மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்