சில்லறை தகராறு.. பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சி காட்சி..!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கனூர் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட 2 இளைஞர்கள், 500 ரூபாய் கொடுத்து சில்லறையை கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பங்க் ஊழியரை, இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பங்க் ஊழியர், சிசிடிவி காட்சிகளோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பத்தனம்திட்டாவை சேர்ந்த 19 வயதான அஜு அஜயன், வினோ ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story