கேரளாவில் நிபா வைரஸ்க்கு இளைஞர் பலி... - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

x

கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 170க்கும் மேற்பட்டோரின் மாதிரிகள் பரிசோதனைக்கு

உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்