``அரை செகண்ட் தாமதித்திருந்தாலும் பிள்ள உசுரு நிச்சயம் இல்ல’’ - மின்னல் வேகத்தில் காப்பாற்றிய தாய்

x

கேரள மாநிலம் அழிக்கோடு பகுதியில் தாயின் மின்னல் வேக செயலால் 2 வயது சிறுவன் பெரும் விபத்தில் இருந்து தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பிஜோய் - கிரிஷ்மா தம்பதியின் 2 வயது மகன் கிங்ஸ், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, கேட்டை கிரிஷ்மா மூட முயற்சித்தபோது, திடீரென கேட் சாய்ந்தது. உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட கிரிஷ்மா, கேட்டை தாங்கி பிடிக்க சிறுவன் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பினான்.


Next Story

மேலும் செய்திகள்