சர்ச்சை பேச்சு உண்மையாக இருக்கலாம் - அமைச்சர் பதவிக்கு வந்த சிக்கல்

x

அரசியல் சாசன சட்டம் பற்றி சர்ச்சையாக பேசிய கேரள அமைச்சர் மீது மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள அமைச்சரான சஜி செரியன், 2 ஆண்டுகளுக்கு முன், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது, மக்களை கொள்ளையடிப்பதற்காகவே அரசியல் சாசன சட்டம் உள்ளதாகவும், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது என்றும் சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பான வழக்கில், சஜி செரியன் விடுவிக்கப்பட்டதால், இந்த விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்திருந்த சஜி செரியனிற்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சஜி செரியன் பேச்சை பரிசோதித்ததில் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதால் போலீசார் தொடர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்