#BREAKING | தமிழகத்தை அதிர வைத்த கேரள மருத்துவ கழிவு.. _ போலீசார் அதிரடி..

x

திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்- மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தமாக இந்த விவகாரத்தில் ஐந்து வழக்குகள் பதிவு!!

திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர்,பழவூர்,வடக்கு அரியநாயகிபுரம்,சிதபற்பநல்லூர்,கொண்டாநகரம், உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்

சுத்தமல்லி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட முழுதும் கழிவுகள் கொட்டபட்ட இடங்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில் மேலும் 2 இடங்கள் கழிவுகள் கொட்டபட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு

ஏற்கனவே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜென்ட்க்கு வலைவீச்சு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்