வாட்ஸ்அப் குருப்பால் வெடித்த சர்ச்சை.. - 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை..

x

கேரளாவில் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி உட்பட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மல்லு ஹிந்து என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி, ஹிந்து மதத்தை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்த‌தாக, தமிழ் ஐஏஎஸ் அதிகாரியான தொழில்துறை செயலாளர் கோபாலகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தனது தொலைபேசி எண்ணை யாரோ ஹேக் செய்து, இவ்வாறு குழு உருவாக்கியதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, உண்மை விவரங்களை சேகரித்தனர். அதன்பின்னர் அந்த குழுவை உருவாக்கியது கோபாலகிருஷ்ணன் தான் என கூறப்பட்டது. இதேபோல், கேரள மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலகனுக்கு எதிராக விமர்சனம் முன் வைத்த, விவசாயத்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் ஐஏஎஸ்க்கு எதிராகவும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரசாந்த் ஆகிய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்