கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கைகோர்த்து குத்தாட்டம் போட்ட காவல்துறை அதிகாரிகள் - வெளியான ஃபன் மொமண்ட்

x

கேரள மாநிலம் பத்தணம்திட்டா அருகே கிறிஸ்மஸ் தாத்தாவுடன் ஆட்டம் போட்ட காவல்துறை அதிகாரிகளின் வீடியோ வைரலாகி உள்ளது. கோயிப்புறம் காவல் நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷமிட்ட ஒருவர் நடனமாடினார். அவரோடு காவல்துறை அதிகாரி மற்றும் போலீசார் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தங்களை மறந்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்