உலக அமைதிக்காக இருமுடி கட்டி 8,000 கிமீ நடைபயணம் மேற்கொண்ட ஐயப்ப பக்தர்கள்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், உலக அமைதிக்காக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு சபரிமலை வந்தடைந்தனர். காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி இருமுடி கட்டி தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். அயோத்தி, உஜ்ஜயினி, புரி, சிவசங்கர், ஜகன்நாத், ராமேஸ்வர், அச்சன்கோவில், எருமேலி வழியாக பல கோவில்களில் தங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு பின்னர் நடைபயணமாக சபரிமலை வந்தடைந்ததாக சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.
Next Story