கேரளாவை அதிரவைத்த தமிழக IAS அதிகாரி வாட்ஸ்ஆப் குரூப்... சூடுபிடிக்கும் விசாரணை

x

கேரளாவில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி வாட்ஸ்ஆப் குரூப் விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன், கேரள உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய whatsapp குரூப் உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. செல்போன் ஃபார்மேட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்த முயன்றதாக கூறப்பட்ட நிலையில், வழக்குப்பதிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதனிடையே, தடயங்களை சேகரிக்க திருவனந்தபுரம் போலீஸ் முடிவு செய்த நிலையில், விசாரணை பொறுப்பை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மாநகர துணை ஆணையரிடம் ஒப்படைத்துள்ளது. இதன்பின் வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்