தண்ணீர், காய்கறி மட்டுமே உணவு.. 18 வயது பெண்ணின் உயிரை பறித்த டயட் - உஷார் மக்களே
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆன்லைனில் வீடியோவைப் பார்த்து டயட்டை பின்பற்றி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநந்தா என்ற பெண் எடை அதிகரித்து விடுவோமோ என்ற அச்சத்தில் வாட்டர் டயட்டை பின்பற்றியுள்ளார்... சாப்பிடாமலேயே இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீநந்தா சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுவோமோ என அச்சப்பட வைக்கும் anorexia nervosa எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
Next Story