ஒரு மாநிலத்தையே உலுக்கிய சிறுமி பலாத்காரம்.. 64 பேர்.. கூடிக்கொண்டே போகும் மிருகங்களின் எண்ணிக்கை

x

பத்தணம்திட்டா மாவட்டத்தில் விளையாட்டு வீராங்கனை ஒருவர், 13 வயதில் இருந்து 18 வயது வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 64 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், பள்ளியிலும், விளையாட்டு மையங்களிலும் பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. விரிவான விசாரணைக்கு கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எஃப்ஐஆர் எண்ணிக்கை 7 ஆகவும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட சுபின் என்பவர்தான், காதலிப்பது போல் நாடகமாடி சிறுமியை 13 வயதில் முதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரப்பர் தோட்டத்தில் சித்ரவதை செய்யும் காட்சிகளை சுபின் வீடியோ எடுத்து, நண்பர்களுக்கும் பகிர்ந்ததோடு, அவர்களையும் அழைத்து வன்கொடுமை செய்த‌து தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளில் உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்