JUSTIN | பள்ளி முடிந்து ஜாலியாக வீடு திரும்பிய மாணவிகள் துடிதுடித்து பலியான பயங்கரம்... நொடியில் முடிந்த வாழ்வு

x

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லடி கோடு பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஐந்து பேர் தங்கள் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற பின்பு வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியேறி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது கோழிக்கோட்டில் இருந்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவிகளுக்கு இடையே புகுந்து கவிழ்ந்தது இந்த விபத்தில் லாரிக்கு அடியில் மாணவிகள் சிக்கிய நிலையில் கிரேன் கொண்டுவரப்பட்டு லாரி அகற்றப்பட்டு மாணவிகள் மீட்கப்பட்டனர் விபத்தில் மூன்று மாணவிகள் உயிரிழந்த நிலையில் இரு மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்