ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவாலின் கருத்து - ED-க்கு இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்

x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியதோடு, ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறையில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் பரப்புரையின் போது, ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் ஜூன் 2ம் தேதி சிறைக்கு போக வேண்டியதில்லை எனக் கூறியதை சுட்டிக்காட்டி வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இவ்விவகாரத்திற்குள் செல்ல விரும்பவில்லை என கூறியதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து அவருடைய அனுமானம் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும், யாருக்கும் எந்தவித விதிவிலக்கும் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்