``டெல்லி எதிர்க்கட்சி தலைவராக தலித்'' - கெஜ்ரிவாலுக்கு பறந்த பரபர கடிதம்

x

டெல்லியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு, ஆம் ஆத்மி அதிருப்தி எம்.பி. சுவாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2022-ம் ஆண்டு பஞ்சாப் தேர்தலின்போது, வெற்றி பெற்று தலித் ஒருவரை துணை முதல்வராக்குவோம் என்று அளித்த வாக்குறுதியை 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாதது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இம்முறை வாக்குறுதியை நிறைவேற்றி சமத்துவம் மற்றும் நீதிக்கான அரசியல் செய்வதை நிரூபிக்குமாறும் சுவாதி மாலிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்