BREAKING || காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு - எம்எல்ஏக்கள் வெளியேற்றம்... கொந்தளிக்கும் பாஜக

x

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக அமளி நீடித்து வருகிறது.

குப்வாராவின் பிடிபி எம்.எல்.ஏ 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கான பேனரைக் காட்டியதை அடுத்து சட்டசபையில் சலசலப்பு

பொறியாளர் ரஷீத்தின் சகோதரரும், அவாமி இத்தேஹாத் கட்சி எம்எல்ஏவுமான குர்ஷித் அகமது ஷேக், 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற பேனரை நேற்று சட்டப்பேரவையில் காட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எம்எல்ஏக்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. உடனே சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பேரவை கூட்டத் தொடர் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்