உணவு பரிமாறாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி.. கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

x

சிவமொக்காவில் உள்ள ஆம்பிளிகோலா கிராமத்தில், மனு என்பவர் தனது மனைவி கவுரவம்மாவிடம் தனக்கு உணவு பரிமாற வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர், உணவு பரிமாற மறுத்ததுடன் செல்போனில் தனது தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வேண்டுமானால் நீங்களே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை அடித்து, துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி, சாப்பாடு பரிமாற மறுத்ததால் கௌரவம்மாவை கொலை செய்ததாக அவரே கூறியுள்ளார்.இதையடுத்து கௌரவம்மாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் மனுவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்