வகுப்பறையில் பகீர் சம்பவம்! சக மாணவனை கத்தியால் குத்திய சிறுவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம் பெல்காவில் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் பிரதீப்பை, மூன்று மாணவர்கள் தங்களது ஸ்கூல் பேக்கையும் சுமந்துவர கேட்டுள்ளனர். அதற்கு பிரதீப் மறுப்பு தெரிவிக்கவும் மூன்று மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு தப்பிவிட்டனர். பிரதீப்பை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவன் பிரதீப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வேளையில், கத்தியால் குத்திய மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story