வீட்டின் கதவை திறந்ததும் ரத்தம் தெறித்து பலியான பெண்.. தனியாக இருக்கும் பெண்களே உஷார்

x

மாண்டியா மாவட்டம் கியாத்தனஹள்ளி பகுதியில் வசித்து வரும் 60 வயதான விவசாயி ரமேஷ் என்பவரின் வீட்டின் கதவை மர்ம நபர் ஒருவர் தட்டினார். ரமேஷின் மனைவி யசோதா கதவை திறந்தபோது, மரம் அறுக்கும் இயந்திரம் ஆர்டர் கொடுத்துள்ளீர்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்ககு யசோதா நாங்கள் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்றார். உடனே கையில் இருந்த மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆன் செய்து, யசோதாவின் கழுத்தை இயந்திரத்தால் வெட்டினார். இதனால் ரத்தம் வெளியேறிய அவர் மயக்கம் அடைந்தார். வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த விவசாயி ரமேஷை, அதே இயந்திரத்தால் அறுத்துக் கொலை செய்தார். யசோதாவின் சத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நகரை பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்த முகமது இப்ராகிம், என்பது தெரியவந்தது. அவர் ஆன்லைன் மொபைல் விளையாட்டில் பணத்தை இழந்ததாகவும், இதற்காக வாங்கிய கடனை செலுத்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்