மின்னல் வேகத்தில் 7 வயது சிறுவன் மீது மோதிய பைக்.. இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
கர்நாடகாவில் சாலையை கடக்கும்போது நடந்த விபத்தில் 7 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். கர்நாடக மாநிலம் பாலியூர் என்ற இடத்தில், சிறுவன் ஒருவன் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுவன் தூக்கி எறியப்படும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story