குடிபோதையில் தள்ளாடி தாலி கெட்ட வந்த மணமகன்.. கல்யாணத்தை நிறுத்திய பெண்ணின் தாயார் -வைரலாகும் வீடியோ
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், திருமண மேடைக்கு மணமகன் மது அருந்திவிட்டு வந்ததால், மணமகளின் தாயார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் தள்ளாடியபடி வந்து, தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் தாயார், திருமணத்தை நிறுத்திவிட்டு தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் இந்தி மொழியில் பேசும் நிலையில், பெங்களூருவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பெங்களூரு போலீஸாருக்கு புகார் எதுவும் வரவில்லை என்றும் தெரிகிறது.
Next Story