மக்களைத் தேடி கலெக்டர் - உற்சாக வரவேற்பளித்த மக்கள்!

x

புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் திட்டத்தின் மூலமாக குறை கேட்க சென்ற மாவட்ட ஆட்சியரை ஊர் எல்லையில் நிறுத்தி மேள தாளம் முழங்க வரவேற்று பட்டாசு வெடித்து ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்துச் சென்றனர். அப்போது தமக்கு பூரண கும்ப மரியாதை அளித்த மூதாட்டிகளின் காலில் விழுந்து மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வட பாயசத்துடனான மதிய உணவை மக்களோடு மக்களாக அமர்ந்து உண்ட மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், கண்ணீருடன் புகார் அளிக்க வந்த மக்களிடம் அன்பாக பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்