#JUSTIN || ஞானவாபி மசூதியில்...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஞானவாபி ம சூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஞானவாபி மசூதியில் ஆய்வை நடத்த வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, இந்த உத்தரவுக்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கியது. நீதியின் நலன் கருதி அறிவியல் பூர்வமான அகழாய்வு அவசியம் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பாக மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையிடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரானது என மசூதி கமிட்டியின் சார்பில் வாதிடப்பட்டது.
ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வு அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருக்கும் என ஹிந்து தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், ஞானவாபி மசூதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அகழாய்வை மேற்கொள்ளாமல் ஆய்வை மட்டுமே நடத்த வேண்டும் உத்தரவிட்டு மசூதி கமிட்டியின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.