பாஜக தலையில் இடியை இறக்கிய ஹேமந்த் - கல்பனா படை.. எதிரே நின்று மண்ணை கவ்விய அண்ணி...

x

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன், அவருடைய மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில், பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன், பாஜக வேட்பாளர் கம்லியேலைவிட 39 ஆயிரத்து 791 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன், பாஜக வேட்பாளர் சுனில் சோரனைவிட 14 ஆயிரத்து 588 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காண்டே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், பாஜக வேட்பாளர் முனியா தேவியை காட்டிலும் 17 ஆயிரத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

செராய்கெல்லா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் உறவினர் சம்பை சோரன், ஜேஎம்எம் வேட்பாளர் கனேஷ் மஹாலியை 20 ஆயிரத்து 447 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ஜம்தாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன், காங்கிரஸ் வேட்பாளர் இர்பான் அன்சாரியிடம் 43 ஆயிரத்து 458 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.ஜெகநாத்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா தோல்வியை தழுவியுள்ளார்.போட்கா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டா, ஜே.எம்.எம் வேட்பாளர் சஞ்சிப் சர்தாரிடம் தோல்வியடைந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்