இன்று மாலை மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் ஹேமந்த் சோரன்

x

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி 56 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மாலை ராஞ்சியில் உள்ள ராஜ்பவனுக்குச் சென்று ராஜினாமா செய்துவிட்டு, ஜார்கண்டில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பதவியேற்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்