ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி முதல் வெற்றி

x

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. டோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ரானாவைக் காட்டிலும் 4 ஆயிரத்து 538 வாக்குகள் அதிகம் பெற்று மேஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் வெற்றியைக் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்