உலகின் மிக உயரமான செனாப் பாலத்தில் வெற்றிகரமான 2வது சோதனை ஓட்டம் | Jammu Kashmir
உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தின் மீது, 2வது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 359 மீட்டர் உயரம் கொண்டதாகும். கடந்த ஜூன் மாதத்தில் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story