ஸ்டம்ப் பெயில்ஸை இடமாற்றி விளையாடிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க்
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கும், இந்திய வீரர் ஜெய்ஸ்வாலும் ஸ்டம்ப் பெயில்ஸை மாற்றி மாற்றி விளையாடியது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் பண்ட் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஸ்டார்க் ஸ்டம்ப் பெயில்ஸை மாற்றினார். உடனடியாக ஜெய்ஸ்வாலும், ஏற்கனவே இருந்தபடி பெயில்ஸை மாற்றினார். அப்போது மூடநம்பிக்கையை நம்புகிறாயா என ஸ்டார்க் எழுப்பிய கேள்விக்கு தன்னை மட்டுமே நம்புவதாகவும், அதனால்தான் இங்கு இருப்பதாகவும் ஜெய்ஸ்வால் பதிலளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story