ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம்.. NCB உடன் கைகோர்த்த ED.. நேம் லிஸ்ட் ரெடி.. சிக்கும் பிரபலங்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில், நீண்ட நாள் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
டெல்லியில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் அரசியல் கட்சிகளும், திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறிய என்.சி.பி அதிகாரிகள், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி ஜாபர் சாதிக்கை ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
Next Story