நாசாவுக்கே சவால் விட்ட இஸ்ரோ.. இனி இந்தியாவுக்கே சொந்தமா.. ரஷ்யா, சீனாவே திரும்பி பார்க்க சம்பவம்

x

விண்வெளியில், ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான முதல்படியாக டாக்கிங் சிஸ்டம் ஆராய்ச்சியை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி.சிக்ஸ்டி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவப்படுவதை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி சிறுவர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்...

இந்த ராக்கெட்டில் (SpaDeX- A) ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி (SpaDeX- B)ஆகிய இரண்டு விண்கலன்கள் உள்ளது. தலா 220 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில் நிலை நிறுத்தப்படும். பிறகு சிறிது சிறிதாக இந்த இடைவெளியை குறைத்து இரண்டு விண்கலன்களும் ஒன்றாக இணைக்கப்படவுள்ளது. இப்படி விண்கலன்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் செயல்முறை 'டாக்கிங்' என அழைக்கப்படுகிறது.

வரும் ஜனவரி ஏழாம் தேதி இரண்டு விண்கலனையும் இணைக்கும் டாக்கிங் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதில் வெற்றி பெற்று விட்டால், இதனை சாதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். தந்தி டிவி செய்திகளுக்காக ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவியுடன் செய்தியாளர் ராமச்சந்திரன்..


Next Story

மேலும் செய்திகள்