``வெற்றி.. பிரமாண்ட வெற்றி'' - உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ

x

இஸ்ரோவின் 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி என தகவல்

விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக தகவல்

விண்ணில் 2 செயற்கைக்கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தகவல்

விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது, இந்தியா

ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன

ஜன.7ஆம் தேதி முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பின் ஜன.9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது

ஜன.9ஆம் தேதியும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் டாக்கிங் செயல்முறையை 4வது முறையாக இன்று தொடங்கிய இஸ்ரோ அதில் வெற்றி கண்டு வரலாறு படைத்துள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்