இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் அடுத்த சாதனை | ISRO
இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் அடுத்த சாதனை
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி.60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்றிரவு 8.58 மணிக்கு தொடங்கியது. ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில், இரு செயற்கைக் கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
Next Story