பும்ரா செய்த சம்பவம்.. ஆஸ். வைத்த சவால் இலக்கு | IND Vs AUS
பும்ரா செய்த சம்பவம்.. ஆஸ். வைத்த சவால் இலக்கு
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற, 340 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. பிஜிடி தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில், 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 340 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
Next Story