தட்டு தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. மிரட்டிவிட்ட மிட்செல் ஸ்டார்க்
தட்டு தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. மிரட்டிவிட்ட மிட்செல் ஸ்டார்க்
பி.ஜி.டி. தொடரின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா, 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நிதானமாக ஆடி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்களும், கே.எல்.ராகுல் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், லபுஷேன் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 94 ரன்கள் பின்தங்கிய நிலையில், ரன்களை குவிக்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவும், குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க வைக்கும் நோக்கில் இந்தியாவும் இரண்டாம் நாள் ஆட்டத்தை காலை 9.30 மணிக்கு தொடரவுள்ளது.