முன்னாள் பிரதமர் கொலை சம்பவம்... மக்களவை தேர்தலில் போட்டியிடும் அந்த நபர் - வெளியான தகவல்

x

இந்திரா காந்தி கொலை குற்றவாளியான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

1984 அக்டோபர் 31இல், புது டெல்லியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை அவரின் மெய் காவலர் படையே சேர்ந்த பீந்த் சிங் மற்றும் சத்தவந்த் சிங் சுட்டுக் கொன்றனர். பீந்த்சிங் இதர மெய் காவலர்களால் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட சத்வந்த் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பீந்த் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் கல்சா, பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள, 45 வயதான சரப்ஜித் சிங் கல்சா இதற்கு முன்பு பல தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 முதல் 2019 வரை நான்கு மக்களவை தேர்தல்களில் இதற்கு முன்பு போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். 2019 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்