இந்தியாவுக்கு சொந்தமான நிலம் - சீனாவை சீண்டிய வங்கதேசம்.. பணிய வைக்க மிரட்டும் சீனா
இந்தியாவின் அருணாச்சல பிரதேசமும், அக்சய் சின் (Aksai Chin) பகுதியும் இந்தியாவுக்கே சொந்தம் என்று வங்கதேசம் பாடப்புத்தகத்தில் தெரிவித்திருப்பதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் 2 பாடப்புத்தகங்கள் மற்றும் நில அளவைத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சய் சின் பகுதி இந்தியாவில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தைவான் மற்றும் ஹாங்காங்கை தனித்தனி நாடு என்றும் வகைப்படுத்தியுள்ளது. இதனால், சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக முடிவுகளை எடுத்து வரும் வங்கதேச இடைக்கால அரசாங்கம், சீனாவின் அழுத்ததை ஏற்று மாற்றங்களை செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story