தலைக்கேறிய போதையில் தகராறு... பயணியை பெல்டால் சரமாரியாக தாக்கிய TTR - அதிர்ச்சி காட்சி

x

ரயிலில் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பயணியை, டிக்கெட் பரிசோதகர் பெல்டால் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித்சரில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒருவர், குடித்துவிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர், அந்த நபரை தனது பெல்டால் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், லக்னோ கோட்ட ரயில்வே பொது மேலாளர், டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். படுகாயம் அடைந்த அந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்