"அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு.." கேரளாவில் பறந்த 3 ஆம் வகுப்பு சிறுவன் எழுதிய கடிதம்

x

வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபடும் ராணுவத்திற்கு 3ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதியதும், அவருக்கு ராணுவம் பதில் அளித்திருப்பதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ரியான் என்ற 3ஆம் வகுப்பு மாணவன் எழுதியுள்ள கடித‌த்தில், நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவம் காப்பாற்றுவதை பார்க்கும் போது, பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்த‌தாக குறிப்பிட்டுள்ளார். ராணுவ வீர‌ர்கள் பாலம் கட்டியதையும், பசியில் பிஸ்கெட் சாப்பிடுவதையும் பார்த்து நெகிழ்ந்த‌தாகவும், ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து தேசத்தை காப்பாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு இந்திய ராணுவ Southern command தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதில் அளித்துள்ளது. அதில், சிறுவனின் கடிதம் தங்களை ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளது. ராணுவ சீருடை அணிந்து நிற்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும், ஒன்றுபட்டு தேசத்தை பெருமைப்படுத்துவோம் என்றும் கூறியுள்ள இந்திய ராணுவம், இளம் வீரரின் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் ஆயிரம் நன்றிகள் என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்