"அவர் என்ன ஹெட்மாஸ்டரா?" - வெடிக்கும் I.N.D.I.A

x

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி இந்தியா கூட்டணி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, துணை குடியரசு தலைவர் பதவி இந்திய அரசியலமைப்பில் 2 ஆவது மிகப்பெரிய பதவி என்றும் அப்பதவியில் இருந்தவர்கள் யாரும் ஒருதலைபட்சமாகவோ அரசியலமைப்பை தாண்டியும் ஒருமுறை கூட நடந்தது இல்லை என தெரிவித்தார். இப்போது ஜெகதீப் தங்கர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கு முரணாக அவரது செயல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் என குறிப்பிட்ட கார்கே, ஜெகதீப் தங்கர், பள்ளி ஹெட்மாஸ்டர் போல நடந்து கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மாணவர்களை போல பாடம் எடுப்பதோடு அவர்களை பேசவிடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பை காக்கவே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்