“நிதிஷ் இந்தியா கூட்டணியில் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது'' - லாலு பிரசாத் யாதவ்

x

இண்டியா கூட்டணியில் சேர பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு, லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அடிக்கடி அணியை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர். கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை அணி தாவிய அவர், தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் முதலமைச்சராக உள்ளார். நடப்பாண்டில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இண்டியா கூட்டணியில் சேர நிதிஷ்குமாருக்கு, ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சியில் பேட்டியளித்த அவர், “நிதிஷ்குமார், இண்டியா கூட்டணியில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது. அப்படி வந்தால் அவரது கடந்த கால தவறுகளை மன்னிப்பேன். அவருக்கு கதவு திறந்தே இருக்கிறது“ என தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி அமைய நிதிஷ் குமாரே முக்கிய காரணியாக இருந்தார் என்பதும், தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காததால் மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்