இந்திய வீர‌ர்களுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் | India

x

இந்திய வீர‌ர்களுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்

தெற்கு சூடானில் ஐ.நா அமைதிப் படையில் சிறப்பாக பணியாற்றும் இந்திய ராணுவ வீர‌ர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. தெற்கு சூடானில் மலகல், கொடக், ரெங்க் ஆகிய பகுதிகளில் ஐ.நா அமைதிப்படை செயல்பட்டு வருகிறது. அதில், இந்திய ராணுவ வீர‌ர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மருத்துவ முகாம்கள், கால்நடை மருத்துவ முகாம்கள் என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தி அமைதிப்படை வீர‌ர்களின் அணிவகுப்பை, பெண் மேஜர் திவ்யா தியாகி வழிநடத்தினார். பின்னர், 17 பெண்கள் உட்பட ஆயிரத்து 182 இந்திய அமைதிப்படை வீர‌ர்களுக்கு ஐ.நா அமைதிப்படையின் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய அமைதிப்படை வீர‌ர்களின் சேவை தெற்கு சூடானில் நிலைத்திருக்கும் என்று ஐ.நா அமைதிப்படை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்