இந்தியாவில் பள்ளி மாணவர் சேர்க்கை - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில் 2023-2024 கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, 2022-23 ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 25.17 கோடி. ஆனால், 2023-24 ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24.80 கோடி. இதன்மூலம் பள்ளி மாணவர் சேர்க்கை 37 லட்சம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 16 லட்சம் மாணவிகளும், 21 லட்சம் மாணவர்களும் கடந்த ஆண்டு பள்ளியில் சேரவில்லை என கூறப்படுகிறது. இதற்கு மாறாக பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2022-23 கல்வியாண்டில் 8 புள்ளி 7 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2023-24 கல்வியாண்டில் 3 புள்ளி 7 சதவீதமாக குறைந்துள்ளது.
Next Story