மரணத்தை தாண்டிய கொடூரம்... மொத்தமாக உருக்குலையும் உடல் -உலுக்கும் GBS..! - கதறும் புனே

x

புனேவில் அதிகரித்து வரும் வினோத நோய் பாதிப்பு மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆட்டோ இம்யூன் டிசீஸ்' என்று அழைக்கப்படும் "கிலேன் பேரே சிண்ட்ரோம்" (Guillain-Barre Syndrome) என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன் டிசீஸ்' என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய நோய்களில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோமும்' ஒன்று.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அண்மைக்காலமாக இந்த

நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

"கிலேன் பேரே சிண்ட்ரோம்"நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். நோயாளிகளால் எழுந்து நடக்க முடியாது. குதிகாலில் வலி தொடங்கி பின்னர் பாதம் முழுவதும் வலி பரவும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புனேவில் 73 பேர் "கிலேன் பேரே சிண்ட்ரோம்" நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேம்பிலோக்பாக்டர் ஜெஜூனி (Campylobacter jejuni) என்ற பாக்டீரியா தொற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு, தடுப்பூசி, அறுவை சிகிச்சை காரணமாகவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாம்.

பொதுவாக 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்

அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நோய் முற்றினால் பக்கவாதம், நுரையீரல் செயலிழப்பு ஏற்படலாம்

என்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 180 பேருக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டில் 3 மாத காலம் மருத்துவ

அவசர நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது. புனேவிலும் தேவைப்பட்டால் மருத்துவ அவசர நிலை அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்