``வங்கதேச இந்துக்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்''... அவையில் முழங்கிய பிரியங்கா காந்தி

x

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக அரசு குரல் கொடுக்க வேண்டுமென, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, விஜய் திவஸ் கொண்டாடப்படும் இந்த நாளில் 1971-ம் ஆண்டு வங்கதேச போரில் நம் நாட்டுக்காக போரிட்ட இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரியங்கா காந்தி, இதுதொடர்பாக வங்கதேச அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்