410 முறை நாட்டை உலுக்கிய மிரட்டல்.... இந்தியா எடுத்த முக்கிய முடிவு
410 முறை நாட்டை உலுக்கிய மிரட்டல்.... இந்தியா எடுத்த முக்கிய முடிவு
விமானங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, இண்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது.கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமானங்கள், விமான நிலையங்கள், தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் 410-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமானங்களை அடிக்கடி சோதனையிடுவதால், அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த மின்னஞ்சல்களை அனுப்புபவர்கள், தங்கள் இருப்பிடத்தை மறைக்கும் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு சவாலாக உள்ளது. இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து இண்டர்போல் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI ஆகியவற்றின் உதவியை இந்தியா நாடியுள்ளது.