``மல்லு ஹிந்து ஆபீஸர்ஸ்..'' நாட்டையே அதிர வைத்த IAS.-சிக்கிய `எவிடென்ஸ்'.. தமிழகத்தை சேர்ந்தவர்களா?

x

கேரள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன் மற்றும் வேளாண் துறை சிறப்பு செயலாளர் என்.பிரசாந்த் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளை கேரள அரசு பணியிடை நீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. காரணம் என்ன? பார்க்கலாம்..விரிவாக..

கேரளாவில் கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ், மதம் ரீதியான வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்து உயர் அதிகாரிகளை இணைத்ததாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக நடந்த உயர்மட்ட விசாரணையில், தனது போன் ஹேக் செய்யப்பட்டதாக கோபாலகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் ஜி.ஸ்பர்ஜன்குமார் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் இது தொடர்பாக தரவுகளைப் பெற்றனர்.

அதன் அடிப்படையிலான விசாரணையில், போன் ஹேக்கிங் எதுவும் கண்டறியப்படவில்லை என திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர், டிஜிபியிடம் அறிக்கை சமர்பித்தார்.

இதன்மூலம், கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரியின் செல்போன் எண்ணில் இருந்து மல்லு ஹிந்து ஆபிசர்ஸ் என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, இந்து மதத்தை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இணைத்தது உள்ளிட்டவை சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதேபோல, வேளாண்துறை சிறப்பு செயலர் என்.பிரசாத், கூடுதல் தலைமை செயலர் திலகனுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தும் விதமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது..

தொடந்து, அகில இந்திய சேவைகள் நடத்தை விதிகள் 1968 மீறி செயல்பட்டதாக, கோபால கிருஷ்ணன் மற்றும் பிரசாத் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்து மேற்கொண்ட விசாரணையின் இறுதியாக, கேரள தலைமை செயலாளர் சாரதா முரளிதரன் விரிவான அறிக்கையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். கேரளாவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

மேலும், இப்படி நடத்தை விதி மீறல் விவகாரத்தில் கேரள அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ், பிரசாத் ஐஏஎஸ் ஆகிய இரண்டு பேரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்