சாதனை படைத்த புஷ்பா 2-க்கு வந்த சோதனை.. அதிர்ச்சியிலிருந்து மீளாத அல்லு அர்ஜுன்

x

சாதனை படைத்த புஷ்பா 2-க்கு வந்த சோதனை.. அதிர்ச்சியிலிருந்து மீளாத அல்லு அர்ஜுன்

ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தைப் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... சிறப்புக் காட்சி திரைடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கத்திற்கு வந்திருந்தார்... இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசல் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது 2 குழந்தைகளும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் கீழ் பால்கனி பொறுப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்... உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்