ஆள் அதிகம் இருக்கும் இடத்தில் கிறுக்குத்தனமாக காரை ஓட்டிய இளைஞர் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி
ஆள் அதிகம் இருக்கும் இடத்தில் கிறுக்குத்தனமாக காரை ஓட்டிய இளைஞர் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
ஐதராபாத்தில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த இளைஞர் ஏற்படுத்திய விபத்தில் மூவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ஹபீப் நகரில் அமைந்துள்ள கல்லூரி அருகே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த இளைஞர், பொதுமக்கள் மீதும் வாகனங்கள் மீதும் காரை உரசியபடி சென்றுள்ளார்... கார் மோதுவதை சற்றும் கண்டு கொள்ளாமல் உடனடியாக ரிவர்ஸ் கியர் போட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்... இதனால் அங்கு பதற்றம் அதிகரித்த நிலையில், போலீசார் அந்த இளைஞரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த இளைஞர் காரால் மோதியதில் 3 பேர் காயமடைந்ததுடன், 5 வாகனங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது...
Next Story